Friday, November 22, 2013

தனுஷுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்...

                http://media.dinamani.com/2013/11/20/kajal.jpg/article1901153.ece/alternates/w460/kajal.jpg
சுராஜ் இயக்கும் படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்.
வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்தின் ‘அனேகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் வெற்றிமாறன் இயக்கும் ‘வேங்கைச்சாமி’ படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தொடர்ந்து படிக்காதவன் இயக்குனர் சுராஜ், தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் காஜல் அகர்வால் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். சுராஜ் இயக்கிய ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை.
இதனால் தோல்விப் படங்களால் வருத்தம் அடைந்த சுராஜ்க்கு இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளாராம். இதன்மூலம் தனுஷ்- சுராஜ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.

0 comments:

Post a Comment