இதைத் தொடர்ந்து, இந்த கோட்டையில் தங்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் தொல்பொருள் ஆய்வு துறையினர் நேற்று முதல் தோண்ட தொடங்கினர். இத்துறையின் துணை இயக்குனர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவின்
மேற்பார்வையில் தோண்டும் பணி நடக்கிறது. முன்னதாக, புதையல் இருப்பதாக கருதப்படும் இடத்தை சாமியார் குறியீடு செய்து, அங்கு பூமி பூஜை செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘ஆயிரம் டன் தங்கமும் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பில்லை. பல இடங்களில் இருக்கக் கூடும். அந்த இடங்களில் ஆழமாக தோண்டி பார்க்க வேண்டும். எத்தனை நாளில் இந்த பணி முடியும் என்பதை இந்திய புவியியல் துறையினரும், தொல்பொருள் ஆய்வு துறையினரும்தான் சொல்ல வேண்டும்’’ என்றார்.புதையல் எடுக்கப்படும் தகவல் பரவியதும், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், கோட்டை பகுதியில் ஆர்வத்துடன் குவிந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்காக, போலீசார் ஆங்காங்கு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதையல் விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது. இந்த நீதிமன்றத்தில் சர்மா என்ற வக்கீல் நேற்று தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘கோட்டையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது திருட்டு போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, புதையல் எடுக்கும் பணி முழுவதையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரணைக்கு ஏற்று அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.






0 comments:
Post a Comment