பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். 'மெரினா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார்.
'3' படத்தில் நடித்தபோது தனுஷும்,
சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு
இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது. 'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று
தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான
'எதிர்நீச்சல்' படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார். அந்தப்
படத்துக்காக குறிப்பிட்ட சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், 'கேடி பில்லா
கில்லாடி ரங்கா' படத்தில் நடித்ததற்காக கோடி ரூபாய் சம்பளத்தைத்
தொட்டாராம்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'
படத்துக்காக ரெண்டு கோடி சம்பளம் வாங்கினாராம். படத்தின் வெற்றி
சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை இன்னும் அதிகரித்துவிட்டது. 7
நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதால், தற்போது தன் சம்பளத்தை 5
கோடியாக உயர்த்திவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
இந்த சமயத்தில், சிவகார்த்திகேயனிடம்
கால்ஷீட் கேட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சிவகார்த்திகேயன் 4 கோடி
கேட்க, உதயநிதி அவ்வளவு தர முடியாது என மறுக்க... பேச்சுவார்த்தை
இழுத்துக்கொண்டே போனதாம்.
இறுதியில் இரண்டை கோடிக்கு உதயநிதி ஓ.கே. சொல்ல, சிவாகார்த்திகேயனோ 'நோ' சொல்லிவிட்டாராம்.






0 comments:
Post a Comment