டேவிட் லோரி மற்றும் கத்தரின் லோரி ஆகிய இவ்விருவரும் 35 வயதானவர்கள். கடந்த வருடம் ஜூலை 28 ஆம் திகதி லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான தினத்தில் சிலி நாட்டின் தென் முனையிலிருந்து இப்பயணத்தை ஆரம்பித்தனர்.
100 கிலோகிராம் எடையுள்ள தள்ளுவண்டிகளுடன் 10,300 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்த இத்தம்பதி 15 மாதங்களின்பின் கடந்த ஞாயிறன்று தென் அமெரிக்காவின் வடபகுதியிலுள்ள வெனிசூலாவின் கரையோரத்தை சென்றடைந்தனர். கரிபியன் கடலில் குதித்து தமது பயணத்தின் வெற்றியை இவர்கள் கொண்டாடினர்.
இந்த தம்பதியினர் தென் அமெரிக்காவை கடந்து செல்லும் வீதிகளில் இறந்து கிடந்த விலங்குகளை சமைத்து உட்கொண்டனராம். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் “நாம் காடுகளுக்கூடாகவும் பயணம் செய்தோம். பல விதமான இயற்கை காட்சிகளும் பலவிதமான சுவாரஷ்யமான சம்பவங்களையும் கண்டோம். புதுவிதமான அனுபவங்கள் எமக்கு கிடைத்தன. இப்பயணம் எமது உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. அத்தோடு புதுவிதமான அனுபவங்களும் எங்களுக்கு கிடைத்தன” எனக் கூறியுள்ளனர்.






0 comments:
Post a Comment