ஆனால் சமந்தப்பட்ட ஹீரோக்கள் ஏதாவது ஒரு
பங்ஷனில் கட்டிப்பிடித்து கை குலுக்கிக் கொண்டால் இரண்டு ஹீரோக்களின்
ரசிகர்களும் அந்த நல்ல மூடுக்கு வந்து விடுகிறார்கள்.
அப்படித்தான் அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்துக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்தி
பேனர் வைத்திருப்பது கோலிவுட்டில் ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாகப்
பார்க்கப்படுகிறது.இந்த வருட தீபாவளிக்கு அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீசாக உள்ளது. நாளை மறுநாள் 31- ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகத் தயாராகி விட்டார்கள்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த ஒரே நாளில் 1 வார டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. படம் ரிலீசாகும் தியேட்டர்களிலும் அஜீத் ரசிகர்கள் பேனர் மற்றும் கொடிகளை வைத்து ‘ஆரம்பம்’ படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து பேனர் வைத்து வரவேற்பு கொடுத்துள்ளனர். மதுரையில் உள்ள கோல்டன் பாய்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த
விஜய் ரசிகர்கள் அங்குள்ள முக்கியமான வீதிகளில் இந்த பேனர்களை வைத்துள்ளனர். இந்த பேனரைப் பார்க்கும் மக்களும் மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியமாகப் பார்த்துச் செல்கின்றனர்.
இந்த பேனரில் அஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டி விடுவது போன்ற படத்தை வைத்து, ‘சிங்கம் இல்லாத காடா… தல, தளபதி இல்லாத நாடா’ என்ற பஞ்ச் டயலாக்கையும் அச்சடித்துள்ளனர்.
அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தை வரவேற்று விஜய் ரசிகர்கள் வைத்துள்ள பேனரால், அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
ஒரு ஹீரோவின் ரசிகர்கள் இன்னொரு ஹீரோவின் படத்தை வாழ்த்தி வரவேற்பதே ஒரு நல்ல ‘ஆரம்பம்’ தானே…






0 comments:
Post a Comment