Wednesday, October 30, 2013

காமெடி கிங்ஸ் ரிட்டன்ஸ்....

   
இரண்டு வருடங்களாக படம் எதுவும் நடிக்காத நிலையில் இம்சை அரசன் பாணியில் ஜகஜால புஜபல தெனாலி ராமன் என்ற படத்தில் ரீஎண்ட்ரி ஆகிறார் வடிவேலு, கிட்டத்தட்ட பத்து, பதினைந்து வருடங்கள் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார், வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் நழுவிப்போனது. இப்போது கல்பாத்தி S.அகோரம் தயாரிக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் வடிவேலு இனியும் ஒரு ரவுண்டு வருவாரா?. ”வாய மூடி சும்மா இருடா” என்று யாராவது இனிமே அறிவுரை கூறினார் புண்ணியமா போகும்….
அதேபோல் வடிவேலு கலக்கிய அந்த பதினைந்து வருடங்களிலும் அதிகமாக படங்கள எதுவும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி இப்போது “வாய்மை” எனும் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார். வடிவேலுக்கு முன்பு தமிழ்சினிமா காமெடியில் கவுண்டமணியின் ஆட்சிதான். இடையில் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி மறுபடியும் காமெடியில் கலக்குவாரா?. எது எப்படியோ ஊர் ரெண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல கூத்தாடிகள் ரெண்டானால் ஊருக்கு கொண்டாட்டம் தான்.

0 comments:

Post a Comment