‘என்றென்றும் புன்னகை’ படத்தில் பெண்களை
கேவலமாக சித்தரித்து சந்தானம் பேசியிருக்கும் காமெடி காட்சிக்கு சென்சார்
போர்டு அனுமதியே தரவில்லை என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
எங்களிடம் காட்டிய ட்ரெய்லரில் அந்தக் காட்சியே இல்லை என்று சென்சார் போர்டின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம்
தியேட்டரில் நடந்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் ஆடியோ பங்ஷனில் அந்தப்
படத்தின் ட்ரெய்லர் காண்பிக்கப்பட்டது.
ட்ரெய்லரை பார்த்த எல்லோருக்குமே அதிர்ச்சி.
காரணம் அதில் வரும் ஒரு காட்சியில் வேலைக்குப் போகும் பெண்களை மிகவும்
கீழ்த்தரமாக சித்தரித்து ஒரு காமெடி டயலாக் பேசியிருந்தார் சந்தானம்.
ஆனால் அந்த மேடையில் இருந்த கமல் உள்ளிட்ட
எந்த பிரபலமும் அந்தக் காட்சியை கண்டிக்கவில்லை. மாறாக ட்ரெய்லர் சூப்பர்
என்று பாராட்டி விட்டுச் சென்றார்கள்.
இதற்கிடையே பத்திரிகையாளர்விக்னேஷ்ராஜா
அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை நாமும்
வெளியிட்டிருந்தோம். அதோடு விட்டுவிடாமல் அந்தக்காட்சியை
எப்படி
அனுமதியளித்தீர்கள்? என்றும் விளக்கம் கேட்டு சென்சார் போர்டுக்கு ஒரு
கடிதம் அனுப்பியிருந்தார் விக்னேஷ்ராஜா.
அதற்கு முறையான விளக்கத்தை கொடுத்திருக்கும்
அதிகாரிகள், சத்யம் தியேட்டரில் காண்பிக்கப்பட்ட ‘என்றென்றும் புன்னகை’
ட்ரெய்லரில் விதி மீறப்பட்டுள்ளதாக உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்தப் படத்தில் அப்படியொரு காட்சி இருப்பதே
எங்கள் கவனத்திற்கு வரவில்லை. நீங்கள் சொல்வது போல அவர்கள் எங்களிடம்
அனுமதி கேட்டு கொடுத்திருக்கும் ட்ரெய்லரிலும் சம்பந்தப்பட்ட அந்த காட்சி
இல்லை என்று கூறியிருக்கும் அவர்கள் இது சம்பந்தமாக அந்தப்படத்தின்
தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம் என்று பதில்
கூறியிருக்கிறார்கள்.
இதனால் திட்டமிட்ட தேதியில் ‘என்றென்றும்
புன்னகை’ படம் ரிலீஸ் ஆகுமா என்று திரையுலகினர் மத்தியில் சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. அந்த ட்ரெய்லரை பார்த்த யாரும் கோர்ட்டில் வழக்கு போடாத வரை
பிரச்சனை இல்லை, மீறி யாராவது போட்டால் அதுவே மாசக்கணக்கில்
இழுத்தடிக்குமே? என்றும் கோடம்பாக்கத்தினர் ‘உச்’ கொட்டுக்கிறார்கள்.
அப்படியானால் சட்ட விதிகளின் படி சென்சார்
ஆகாத ஒரு படத்தின் ட்ரெய்லரை விதியை மீறி பொதுமக்கள் கூடும் இடத்தில்
காண்பித்திருக்கிறார் என்றென்றும் புன்னகை படத்தின் தயாரிப்பாளர்
தமிழ்க்குமரன்.
இதற்கிடையே இதுதான் அதிகாரப்பூர்வமான
ட்ரெய்லர் என்று ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் புதிய ட்ரெய்லர்
அந்தப்படத்தின் சார்பில் இன்று அவசரம் அவசரமாக மீடியாக்களுக்கு
அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த ட்ரெய்லரில் சந்தானம் பேசும் சர்ச்சைக்குரிய அந்தக்காட்சி இல்லை.
நாதாரித்தனம் பண்ணினாலும் என்னா நாசுக்கா பண்றாங்க…






0 comments:
Post a Comment