ஆகஸ்ட் 06 இ 1846 இல் பிறந்தவர் (மணமகன்) அண்ணா ஹெய்னிங் ஸ்வான் என்பவர். இவர் தனது 5 வயதில் 4 அடி 8 அங்குல உயரம் வரை வளர்ச்சியடைந்து காணப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட சுமார் 228 செ. மீற்றர்கள். 5 வயதில் இப்படி ஒரு அபார வளர்ச்சியான என அப்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அப்படியாயின் காலப்போக்கில் இவரது வளர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
சரி மணமகள் யார்? அறிய ஆவலாக உள்ளதல்லவா? மார்ட்டின் வான் பியூரன் பேட்ஸ் அவரது பெயர். நவம்பர் 9 1837 இல் பிறந்துள்ளார் . இவரும் சிறு வயது முதலே அபார வளர்ச்சியுடன் காணப்பட்டுள்ளார். இதனால் பலரால் இவர் ராட்சகி எனவும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவர் 7 அடி 2 அங்குல உயரத்தில் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது எப்படி என்று தெரியுமா?ஒரு முறை சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக பயணித்துக்கொண்டிருந்தார் அண்ணா ஹெய்னிங் ஸ்வான். அவர் நிகழ்த்த சென்ற சர்க்கஸ் நிகழ்ச்சி தானும் வந்திருந்தார் மார்ட்டின் வான் பியூரன் பேட்ஸ். இரு”உயர் உள்ளங்களும்” ஒருவரை ஒருவர் பார்த்து
வியந்து போனார்கள். சட்டென காதல் வலையிலும் வீழ்ந்தார்கள். இச்சம்பவங்கள் ஜூன் 17 1871 அன்று டம்பெற்றது. பின்னர் இரு வீட்டாரும் பேசி திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இருவீட்டார் சம்மதத்துடன் லண்டனின் நடைபெற்றது இந்த இரண்டு உயர்ந்து மனிதர்களது திருமணமும்: இதுவே மிக உயராமான அல்லது மிகப்பெரிய மணமக்கள் என்ற வரலாற்று தடத்தினையும் பதித்து சென்றுள்ளது. இவர்களுக்கு பின் நாளில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. இறுதியில் 1888 ஆம் ஆண்டில் அண்ணா ஹெய்னிங் ஸ்வான் இருதய கோளாறு காரணமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment